அஜித்தின் டூப் : வைரலான போட்டோ
ADDED : 1043 days ago
பொதுவாகவே எல்லா முன்னணி நடிகர்களுக்கும் டூப் இருப்பார்கள். ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் முன்னணி நடிகர்களுக்கு பதிலாக டூப் நடிப்பார்கள். காரணம் பலகோடி முதலீட்டில் எடுக்கப்படும் படம் சிறு விபத்து காரணமாக நின்றுவிடும் வாய்ப்பு உண்டு. ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை வழக்கத்தில் இருக்கும் விஷயம்.
பொதுவாக முன்னணி நடிகர்கள் தங்களுக்கு டூப்பாக நடிக்க நிரந்தரமாக ஒருவரை வைத்திருப்பார்கள். ஆனால் அவரை வெளி உலகிற்கு காட்ட மாட்டார்கள். தங்கள் இமேஜ் போய்விடும் என்பதால் ரகசியமாக வைத்திருப்பார்கள். ஆனால் அஜித் எதிலும் வித்தியாசமானவராச்சே. துணிவு படத்தில் தனக்கு டூப் போட்டவருடன் போட்டோ எடுத்துக் கொண்டுள்ளார். அந்த போட்டோ இப்போது வைராக பரவி வருகிறது. அஜித்தின் வெளிப்படத்தன்மைய சிலர் பாராட்டினாலும். பெரும்பாலானவர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.