‛புதிய வீட்டில் நிலவை ரசிக்க போகிறோம்': காதலனுடன் பிரியா பவானி சங்கர்!
ADDED : 1040 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் பிரியா எனும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களால் பிரியா என்றே அழைக்கப்படும் பிரியா பவானி சங்கர் வெள்ளி திரையில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார்.
பிரியா பவானி சங்கர் அவருடைய காதலன் ராஜவேல் என்பவரோடு கடற்கரையில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, தாங்கள் 18 வருடங்களாக கடற்கரை பக்கத்தில் பார்த்து ரசித்த ஒரு இடத்தில் புது வீடு கட்டி இருக்கிறோம். இனி அங்கே இருந்து நிலவையும் கடலையும் ரசிக்கப் போகிறோம் என பதிவிட்டிருக்கிறார். இதற்கு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.