நடிகை ஹரிப்ரியா திருமணம்: நீண்ட நாள் காதலரை மணக்கிறார்
ADDED : 1086 days ago
முன்னணி கன்னட நடிகை ஹரிப்ரியா. துளு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் கனகவேல் காக்க, வல்லக்கோட்டை, முரண் படங்களில் நடித்தார். கடைசியாக சமீபத்தில் வெளிவந்த நான் மிருகமாய் மாற படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்தார்.
ஹரிபிரியாவும் கன்னட நடிகரும், பாடகருமான வசிஷ்ட சிம்ஹாவும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்தார்கள். இருவரும் ஒன்றாக இருக்கும் பல படங்களை இருவருமே பகிர்ந்திருக்கிறார்கள். இந்த நிலையில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இருவரின் குடும்பத்தினரும் இவர்கள் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியதை தொடர்ந்து எளிமையாக திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. திருமண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.