50 மில்லியன் பார்வைகளை கடந்த ஹனுமான் டீசர்
ADDED : 1037 days ago
பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவாகியுள்ள பான் இந்தியா படம் ஹனுமான். வினய் ராய், வரலட்சுமி சரத்குமார், அமிர்தா ஐயர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்திற்கு கவுரவம் ஹரி, அனுதேவ், கிருஷ்ணா சவுரப் என மூன்று பேர் இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள். தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடக்கின்றன. விரைவில் படம் வெளியாக உள்ள நிலையில் கடந்த நவம்பர் 15ம் தேதி டீசர் வெளியிடப்பட்டது. தற்போது இந்த டீசருக்கு 50 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளது. ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. பேண்டஸி படமாக உருவாகி உள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.