ஒரே நாளில் திரைக்கு வரும் ஸ்ருதிஹாசனின் இரண்டு படங்கள்
ADDED : 1148 days ago
நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது பிரபாஸ் உடன் சலார், சிரஞ்சீவியுடன் வால்டர் வீரய்யா, பாலகிருஷ்ணா உடன் வீரசிம்ஹா ரெட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் வால்டர் வீரய்யா, வீரசிம்ஹா ரெட்டி ஆகிய இரண்டு படங்களுமே படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு படங்களுமே ஜனவரி மாதம் சங்கராந்தி விழாவின் போது திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்ருதிஹாசன் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் அவரது ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். அதோடு ட்ரெண்டிங் செய்கிறார்கள். இது தவிர ‛தி ஐ' என்ற ஹாலிவுட் படத்திலும் தற்போது ஸ்ருதிஹாசன் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.