திரைப்பட நடிகர் சிவநாராயணமுர்த்தி காலமானார்
ADDED : 1033 days ago
நகைச்சுவை நடிகர் சிவநாராயணமுர்த்தி(67), திடீர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (டிச.,7) காலமானார்.
திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர் பட்டுக்கோட்டை சிவநாராயணமுர்த்தி. இவர் சுமார் 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இந்நிலையில், இன்று(டிச., 7) இரவு 8.30 மணிக்கு, திடீர் உடல்நலக்குறைவு காரணத்தால், அவர் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு, நாளை(டிச.,8) மதியம் 2 மணி அளவில், பட்டுக் கோட்டையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது மனைவி பெயர் புஷ்பவள்ளி . லோகேஷ், ராம்குமார் என இரு மகன்களும், ஸ்ரீதேவி என்ற மகளும் இவருக்கு உள்ளனர். அவரது திடீர் இறப்பு செய்தி கேட்ட திரைத்துறையினர் பலரும், அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.