வெற்றிமாறன் இயக்கும் வெப் சீரிஸில் பி.சி.ஸ்ரீராம்
ADDED : 1069 days ago
சூரியை வைத்து ‛விடுதலை' படத்தை இயக்கி உள்ளார் வெற்றிமாறன். இரண்டு பாகங்களாக உருவாகும் இதில் விஜய் சேதுபதி, கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. அடுத்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்குபவர் அதையடுத்து கமல்ஹாசன் மற்றும் விஜய் ஆகியோர் நடிக்கும் படங்களை அடுத்தடுத்து இயக்கப் போவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்து ஒரு வெப் சீரிஸை அவர் இயக்கப் போகிறார். இது குறித்த ஒரு தகவலை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், எனது அடுத்த ப்ராஜெக்ட் இயக்குனர் வெற்றி மாறனுடன். இந்த வெப் சீரிஸ் ஜீ 5 தளத்திற்கு தயாராகிறது. இதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் பி.சி. ஸ்ரீராம்.