ஜி.வி.பிரகாஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முறையாக இணையும் படம்
ADDED : 1073 days ago
ஜி.வி.பிரகாஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் ஒரு படத்தில் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை செத்தும் ஆயிரம் பொன் என்ற படத்தை இயக்கிய ஆனந்த் ரவிச்சந்திரன் என்பவர் இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கதையின் நாயகியாக நடித்துவரும் மாணிக் என்ற படத்தை தமிழ், ஹிந்தியில் தயாரித்து வரும் நட்மெக் புரடொக்சன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம்தான் மலையாளத்தில் அமலாபால் நடித்து வெளியான தி டீச்சர் என்ற படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமாரே இசையமைக்கும் இந்த படத்தில் தலைவாசல் விஜய், காளி வெங்கட், இளவரசி ரோஹினி உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பொழுதுபோக்கு நிறைந்த குடும்ப படமாக தயாராகிறது.