தேஜஸ்வினி கவுடா திருமணம் : காதலித்த நடிகரை மணந்தார்
ADDED : 1070 days ago
2018ம் ஆண்டு கன்னடத்தில் ஒளிபரப்பான 'பிலி ஹெந்தி' என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் தேஜஸ்வினி கவுடா. தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரனும் நானும் தொடரின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு 'கல்யாணம் முதல் காதல் வரை', 'ஈரமான ரோஜாவே 2' தொடர்களில் நடித்தார். தற்போது, 'வித்யா நம்பர் 1 ' தொடரில் நடித்து வருகிறார்.
தேஜஸ்வினி கன்னட தொலைக்காட்சி நடிகர் அமர்தீப் என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது நிச்சயிக்கப்பட்டபடி இருவரது திருமணமும் டிச., 14 அன்று நடந்தது. புதுமண தம்பதிகளுக்கு சின்னத்திரையுலகினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.