சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் கைது
ADDED : 1024 days ago
சின்னத்திரை டிவி நிகழ்ச்சிகளில் காமெடிகளில் அசத்தி வருபவர் நாஞ்சில் விஜயன். டிவி சீரியல்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார். கடந்த 2020ல் நடிகை வனிதா மூன்றாவது திருமணம் செய்த விவகாரத்தில் நடந்த விவாதத்தில் சூர்யா தேவி குறித்து அவதூறாக நாஞ்சில் விஜயன் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இவர்களுக்குள் மோதல் இருந்துள்ளது. இதில் தன்னையும், தனது நண்பர்களையும் தாக்கியதாக நாஞ்சில் மீது போலீசில புகார் அளித்துள்ளார் சூர்யாதேவி. இதுதொடர்பாக நாஞ்சில் விஜயன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் விசாரணைக்கு ஆஜராகும் படி நாஞ்சிலுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று(டிச., 17) நடிகர் விஜயனை போலீசார் கைது செய்தனர்.