ராம்சரண் அணிந்த சட்டை மதிப்பு ரூ.2 லட்சமாம்
ADDED : 1024 days ago
ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து தற்போது ஷங்கர் இயக்கி வரும் ஆர்சி 15 என்ற படத்தில் நடித்து வருகிறார் ராம்சரண். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இந்த நேரத்தில் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு டாப் ரேஞ்ச் ஹீரோ ஆகி விட்ட ராம் சரணின் சம்பளமும் கணிசமாக உயர்ந்துள்ளதாம்.
இந்த நிலையில் தற்போது ராம்சரண் வரிக்குதிரை டிசைன் போட்ட சட்டை அணிந்தபடி தனது நண்பர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த சட்டையின் விலை ரூபாய் 2 லட்சமாம். இப்படியொரு செய்தி சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து, ஒரு படத்தில் நடிப்பதற்கு கோடிக்கணக்கான சம்பளம் வாங்கும் நடிகருக்கு ரெண்டு லட்சமெல்லாம் ஒரு விஷயமா என்பது போன்று நெட்டிசன்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.