திரையுலக பயணத்தில் 20 வருடங்களை கடந்த பாவனா
ADDED : 1019 days ago
தமிழில் சித்திரம் பேசுதடி என்கிற படத்தில் இயக்குனர் மிஸ்கினால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை பாவனா. தொடர்ந்து தீபாவளி, ஆர்யா, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடந்த 2002ல் டிச.,20ல் மலையாளத்தில் வெளியான நம்மள் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் பாவனா. இந்த படத்தை பிரபல இயக்குனர் கமல் இயக்கியிருந்தார்.
இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து மலையாள திரையுலகில் பிசியான நடிகையாக மாறினார் பாவனா. தற்போது தனது திரையுலக பயணத்தில் இருபது வருடங்களை தான் கடந்துள்ளது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள பாவனா, தான் முதன்முதலாக நடித்த நம்மள் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.