பழம்பெரும் தெலுங்கு நடிகர் சலபதி ராவ் காலமானார்
ADDED : 1016 days ago
தெலுங்கு திரையுலகில் 600க்கும் மேற்பட்ட படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்தவர் சலபதி ராவ். இவரது மகன் ரவி பாபுவும் டோலிவுட்டில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக உள்ளார். என்.டி.ராமராவ், கிருஷ்ணா, நாகார்ஜூனா, சிரஞ்சீவி, வெங்கடேஷ் உள்ளிட்டோரின் படங்களில் வில்லனாகவும் சலபதி ராவ் நடித்துள்ளார்.
தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான 'அருந்ததி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சலபதி ராவ் நடித்திருந்தார். 'யமகோலா', 'யுகபுருஷடு', 'ஜஸ்டிஸ் சௌத்ரி', 'பொப்பிலி புலி', 'நின்னே பெளடடா', மற்றும் அல்லரி போன்ற படங்களின் மூலம் தெலுங்கு திரையுலகில் நன்கு அறியப்பட்ட சலபதி ராவ், இன்று அதிகாலை தனது 78வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானர். அவரது மறைவு தெலுங்கு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.