ஆஸ்திரியாவில் ஹனிமூன்: ஹன்சிகாவின் புகைப்படங்கள் வைரல்
ADDED : 1017 days ago
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஹன்சிகா மோத்வானி தனது காதலரும் தொழில் பார்ட்னருமான சோஹைல் கதூரியாவை கடந்த டிசம்பர் 4ம் தேதி ராஜஸ்தானின் பாரம்பரியமான கோட்டையில் திருமணம் செய்துகொண்டார். நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர்.
புதுமணத் தம்பதிகள் ஹனிமூன் கொண்டாடுவதற்காக டிச.,23ல் ஆஸ்திரியாவுக்கு புறப்பட்டனர். அங்கு பெல்வெடெரே அரண்மனை மற்றும் ரதாஸ்ப்ளாட்ஸ் சதுக்கத்திற்குச் சென்றுள்ளனர். மேலும், கிறிஸ்துமஸ் அலங்காரங்களால் பிரமிக்க வைக்கும் ஆஸ்திரிய தலைநகரில், தனது கணவருடன் ஹன்சிகா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் வெளியிட்டுள்ளார்.