மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
985 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
985 days ago
ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் துனிஷா சர்மா. தற்போது 20 வயதாகும் அவர் அலிபாபா தாஸ்தென் இ- காபுல் என்ற ஹிந்தி டிவி தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மும்பை அருகிலுள்ள ராம்தேவ் என்ற ஸ்டுடியோவில் இந்த தொடரின் படப்பிடிப்பில் நடித்து வந்தார் துனிஷா சர்மா. படப்பிடிப்பு இடைவெளியின் போது மேக்கப் அறைக்கு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அறைக் கதவை உடைத்து பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பட குழுவினர், போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். வழக்கு பதிவு செய்த போலீசார், துனிஷா சர்மாவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராமில், ‛இந்த தருணத்தில் மகிழ்ச்சியாக இருங்கள். அதுவே வாழ்வில் போதும்' என்று பதிவிட்டு இருக்கும் துனிஷா சர்மா, நேற்று தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, ‛தங்கள் பேரார்வத்தால் உந்தப்படுபவர்கள், எந்த இடத்திலும் நின்று போக மாட்டார்கள்' என்றும் கடைசியாக தனது ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
காதலர் கைது
இந்த நிலையில் துனிஷாவின் தாயார் அளித்த புகாரின் பேரில், துனிஷாவின் காதலர் ஷீசன் முகமது கான் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரும் அதே டிவி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இருவரும் காதலித்து வந்ததாகவும், 15 நாட்களுக்கு முன்னதாக தான் இருவருக்கும் காதல் முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வருகிற ஜனவரி 4ம் தேதி தனது 21வது பிறந்த நாளை கொண்டாட இருந்த துனிஷா சர்மா, திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் பாலிவுட் பட உலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
985 days ago
985 days ago