சிவகார்த்திகேயனின் மாவீரன் படக்கதை லீக்அவுட் ஆனது!
ADDED : 1013 days ago
பிரின்ஸ் படத்திற்கு பிறகு மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார். சரிதா, புஷ்பா சுனில் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது மாவீரன் படத்தின் கதை குறித்த ஒரு தகவல் கசிந்துள்ளது.
அதாவது இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கார்ட்டூனிஷ்டாக நடிப்பதாக கூறப்படுகிறது. அதோடு அவர் எந்த மாதிரியான கார்ட்டூன் வரைந்தாலும் அது அப்படியே அவருடைய நிஜ வாழ்க்கையில் தோன்றி விடுவதோடு, அந்த கார்ட்டூன்களால் அவர் சந்திக்கும் பிரச்னைகள்தான் இந்த மாவீரன் படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.