டிசம்பர் 29ல் ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் கோல்ட்
ADDED : 1015 days ago
மலையாளத்தில் நேரம், பிரேமம் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், கிட்டத்தட்ட 7 வருட இடைவெளிக்குப் பிறகு கோல்ட் என்கிற படத்தை இயக்கி சமீபத்தில் வெளியிட்டார். பிரித்விராஜ், நயன்தாரா என்கிற புதிய காம்பினேஷன் இந்த படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அதனால் ரிலீசுக்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தியது.
ஆனால் படத்தின் சுமாரான கதை காரணமாகவும் மற்றும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளும் சரிவர ரசிகர்களை சென்றடையததாலும் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியது. திரையிட்ட சிலநாட்களிலேயே தியேட்டர்களை விட்டு வெளியேறிய இந்த படம், வரும் டிசம்பர் 29ல் ஓடிடி தளத்தில் ரிலீசாக இருக்கிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.