'மாவீரன்' புதிய போஸ்டர் வெளியீடு
ADDED : 1017 days ago
'மண்டேலா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் மாவீரன். அதிதி ஷங்கர் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இதில் மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார். படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், 50 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இந்த படத்தை வரும் பிப்ரவரி மாதம் வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. புத்தாண்டையொட்டி வெளியிடப்பட்டுள்ள இந்த ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.