‛பத்து தல' படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகிறது
ADDED : 1119 days ago
சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உட்பட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் பத்து தல. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மார்ச் 30ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. அதோடு மார்ச் மாதம் முதல் வாரத்தில் பத்துதல படத்தின் இசை விழாவை பிரமாண்டமாக நடத்துவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது. மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் வெற்றிக்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் பத்து தல படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.