'வாரிசு' வேலைகளை முடித்த இசையமைப்பாளர் தமன்
ADDED : 1049 days ago
பண்டிகை நாட்களில் திட்டமிட்டபட படங்களுக்கான இறுதிக் கட்டப் பணிகளை முடிப்பதென்பது சாதாரண விஷயமல்ல. இந்த வருடப் பொங்கலுக்கு இசையமைப்பாளர் தமன் இரண்டு பெரிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் விஜய் நடிக்கும் 'வாரிசு', தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் 'வீரசிம்ஹா ரெட்டி' ஆகிய இரண்டு படங்களுக்கும் அவர்தான் இசை.
'வீர சிம்ஹா ரெட்டி' படத்திற்கான வேலைகளை அவர் முன்னரே முடித்துக் கொடுத்துவிட்டதாகத் தகவல். ஆனால், 'வாரிசு' வேலைகளை இன்று நள்ளிரவுதான் முடித்துக் கொடுத்திருக்கிறார். இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி மற்றும் குழுவினருடன் அவர் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “தியேட்டர்களில் முதல் நாள் முதல் காட்சியில் உங்களை சந்திக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.