ஜெயிலர் படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்ற ரஜினி!
ADDED : 1009 days ago
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசைஅமைகிறார்.
முழுக்க முழுக்க ஜெயிலில் நடப்பது போன்று காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஐதராபாத்தில் உள்ள ரமோஜி பிலிம் சிட்டியில் மிகப்பெரிய அளவில் செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பில் கலந்துக் கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் ஐதராபாத் சென்றுள்ளார்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகின்ற ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது .