உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் 10 இந்திய படங்கள்

ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் 10 இந்திய படங்கள்

95வது ஆஸ்கர் விருதுகளில் சிறந்த படத்திற்கான பரிசீலனைக்காக தேர்வு செய்யப்பட்ட 301 படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், இந்தியாவின் சார்பில் 10 படங்கள் இடம் பெற்றுள்ளன.

அதாவது, 2023ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களின் பட்டியலில், ஆர்ஆர்ஆர், கங்குபாய் கத்தியவாடி, தி காஷ்மீர் பைல்ஸ், காந்தாரா, இரவின் நிழல், தி செல்லோ ஷோ, மீ வசந்த்ராவ், தி நெக்ஸ்ட் மார்னிங், விக்ராந்த் ரோனா, ராக்கெட்டரி ஆகிய 10 இந்திய படங்கள் இடம் பெற்றுள்ளன.

இதை மேற்கோள் காட்டியுள்ள நடிகர் பார்த்திபன் தனது இரவின் நிழல் படமும் பட்டியலில் இடம் பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !