மீண்டும் தள்ளிப்போகும் ‛வாத்தி'
ADDED : 997 days ago
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன் நடித்துள்ள படம் ‛வாத்தி'. தமிழ், தெலுங்கில் தயாராகி உள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தனுஷ் வாத்தியாராக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. ஏற்கனவே டிசம்பரில் இந்த படம் ரிலீஸ் என்று சொன்னார்கள். பின் பிப்., 17ல் ரிலீஸ் என அறிவித்தனர். ஆனால் இப்போது அந்த தேதியிலும் படம் வெளியாகாது என்கிறார்கள். ஏப்ரல் அல்லது மேயில் தான் படம் வெளியாகும் என்கிறார்கள். ரிலீஸ் தேதி மாற்றத்துடன் விரைவில் அறிவிப்பு வரலாம்.