சபரிமலையில் அஜித்தின் இன்றைய, நாளை இயக்குனர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் அஜித்தும் ஒருவர். அவர் நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த 'துணிவு' படம் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படத்தை இயக்குனர் வினோத் இயக்கியிருந்தார். பட வெளியீட்டிற்குப் பின் இயக்குனர் வினோத், தனது நண்பர் இயக்குனர் இரா.சரவணனுடன் சபரிமலை சென்றுள்ளார். சபரிமலைக்குச் செல்லும் வழியில் எடுக்கப்பட்ட வீடியோவையும் சரவணன் பகிர்ந்துள்ளார். அங்கு ஐயப்பனுக்கு புஷ்பாபிஷேகமும் செய்துள்ளார்.
முதலாமவர் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கவும், இரண்டாமவர் அடுத்த வெற்றிக்காகவும் ஐயப்பனை வழிபட சென்றுள்ளதாக அஜித் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.