தமிழிலும் வருகிறது, 'நண்பகல் நேரத்து மயக்கம்'
ADDED : 1052 days ago
மலையாள நடிகர் மம்முட்டியின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி மற்றும் ஆமென் மூவி மோனாஸ்ட்ரி இணைந்து தயாரிக்கும் படம் 'நண்பகல் நேரத்து மயக்கம்'. லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கும் இந்தப் படத்தில் மம்முட்டி, ரம்யா பாண்டியன், அசோகன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இப்படம் வரும் வாரம் ஜனவரி 19ம் தேதி மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. பொங்கலை முன்னிட்டு படக்குழுவினர் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து தமிழிலும் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரை நடிகர் மம்முட்டியும், ரம்யா பாண்டியன் ஆகியோரும் பகிர்ந்துள்ளார்கள். தமிழகத்தில் நடக்கும் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தை சரியான விதத்தில் புரமோஷன் செய்து வெளியிட்டால் இங்கும் நல்ல வரவேற்பைப் பெற வாய்ப்புண்டு.