உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாலமேட்டில் ஜல்லிக்கட்டை ரசித்த 'துணிவு' வில்லன் ஜான்

பாலமேட்டில் ஜல்லிக்கட்டை ரசித்த 'துணிவு' வில்லன் ஜான்

'சார்பட்டா பரம்பரை' படத்தின் மூலம் பிரபலமானவர் ஜான் கொக்கேன். தற்போது அஜித் நடித்து வெளிவந்த 'துணிவு' படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இன்று(ஜன., 16) மதுரை பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை தனது மனைவி பூஜா மற்றும் நண்பர்களுடன் பார்த்து ரசித்தார்.



அந்த அனுபவத்தைப் பற்றி, “முதல் ஜல்லிக்கட்டு அனுபவத்தைத் தந்த மதுரைக்கு நன்றி. மதுரையில் ஒவ்வொரு தருணத்தையும் நேசித்தோம். மதுரை உணவையும் ரசித்தேன். அதைவிட முக்கியமாக மதுரையில் 'துணிவு' படத்தைப் பார்த்து என்ஜாய் செய்தேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

மதுரை பயணத்தை முடித்துக் கொண்டு ஜான் கொக்கேன் இன்று கோயம்பத்தூரில் மாட்டுப் பொங்கலைக் கொண்டாடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !