'சூப்பர் ஸ்டார்' பேச்சு கேட்டு புன்முறுவல் பூத்த ரஜினிகாந்த்
தமிழ் சினிமா உலகில் கடந்த சில மாதங்களாக 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டம் குறித்த பேச்சு பெரும் சர்ச்சையாகி வளர்ந்து நிற்கிறது. விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சிலர் பேச அதனால் சர்ச்சை ஆரம்பமானது. ரஜினிகாந்த் தான் பல ஆண்டுகளாக 'சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்பட்டு வருகிறார். அவருக்கு மட்டுமே தான் அந்தப் பட்டம் சொந்தம் என அவரது ரசிகர்களும், சில சினிமா பிரபலங்களும் கூறி வருகிறார்கள்.
அவர் படங்கள் ஓடியதால் மட்டும் அவர் சூப்பர் ஸ்டார் ஆகவில்லை, அவருக்குள் இன்னொரு மனுஷன் இருக்கிறான், அது சூப்பர் ஹியூமன் பீயிங். ஒரு அற்புதமான மனிதர் அவருக்குள்ள இருக்கிறதாலதான் அவர் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்காரு,” என்று ஒய்ஜி மகேந்திரன் பேசம் போது அதைக் கேட்டு மேடையில் இருந்த ரஜினிகாந்த் புன்முறுவல் பூத்து ரசித்தார்.
ரஜினிகாந்த் லேசாக சிரித்தாலும், நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் ஒய்ஜி மகேந்திரனின் 'சூப்பர் ஸ்டார்' பேச்சுக்கு கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்.