உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ்

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ்

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் சார்பாக பொது அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் , தன்னுடைய பெயர், புகைப்படம் , குரல் உள்ளிட்டவற்றை தனது அனுமதியின்றி பயன்படுத்த கூடாது, என்றும் மீறி பயன்படுத்தினால் உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரஜினிகாந்த் தரப்பிலிருந்து வழக்கறிஞர் இளம்பாரதி பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் பல உற்பத்தி நிறுவனங்கள் நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம் , குரல் உள்ளிட்டவற்றை அவரது அனுமதியின்றி பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. இதனால் மக்களிடையே குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதால் ரஜினிகாந்தின் அனுமதி இன்றி அவரது குரல், புகைப்படம், பெயர் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !