உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்!

சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்!

நடிகர் சிம்பு தற்போது 'பத்து தல' படத்தில் நடித்து முடித்துள்ளார். அவரது அடுத்த படத்திற்கான அறிவிப்பிற்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இதற்கிடையே கோகுல் இயக்கத்தில் 'கொரானா குமார்' படத்தில் சிம்பு நடிப்பதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. முழுக்க காமெடி மற்றும் காதல் படமாக உருவாகும் இந்த படத்தின் ப்ரோமோ பாடலும் வெளியானது.

தற்போது இந்த படத்திலிருந்து சிம்பு விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவிற்கு பதிலாக 'லவ் டுடே' படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !