அமானுஷ்யத்தின் பக்கங்களை புரட்டும் ‛கருங்காப்பியம்' : டிரைலர் வெளியீடு
ADDED : 982 days ago
கார்த்திகேயன் என்பவர் இயக்கத்தில் காஜல் அகர்வால், ரெஜினா, ஜனனி ஐயர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஹாரர் படம் கருங்காப்பியம். யோகி பாபு, கலையரசன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்பே எதிர்காலத்தில் நடக்கப் போவதை கணித்து எழுதப்பட்டுள்ள கருங்காப்பியம் என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு ஹாரர் திரில்லர் படமாக இந்தப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க அமானுஷ்ய கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த கருங்காப்பியம் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.