மலேசியாவில் சந்தோஷ் நாராயணனின் இசை கச்சேரி
ADDED : 1024 days ago
அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமான சந்தோஷ் நாராயணன் இப்போது தமிழ் சினிமாவின் முக்கிய இசை அமைப்பாளர். பீட்சா, சூது கவ்வும், குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ் என தொடர்ந்து ஹிட் கொடுத்தவர். 30க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்த அவர் தற்போது அந்தகன், ஜிகர்தண்டா 2, வாழை உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.
இந்த நிலையில் சந்தோஷ் நாராயணன் மலேசியாவில் பிரமாண்ட மேடை இசை நிகழ்ச்சி நடத்துகிறார். வருகிற மார்ச் 18 அன்று மலேசியாவில் உள்ள ஆக்ஸியாட்டா அரங்கில் 'சவுண்ட்ஸ் ஆப் சவுத்' என்ற பெயரில் இந்த இசைகச்சேரி நடக்கிறது. இதில் அவர் மகள் தீ உள்பட பல பாடகர் பாடகிகள் கலந்து கொள்கிறார்கள். தனது திரைப்படம் மற்றும் ஆல்பத்தின் பாடல்களை பாட இருக்கிறார். இதற்கான ஒத்திகை தற்போது மலேசியாவில் நடந்து வருகிறது.