கீதா கோவிந்தம் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேரகொண்டா
ADDED : 982 days ago
விஜய் தேவரகொண்டாவுக்கும், ராஷ்மிகாகவுக்கும் பெரிய திருப்பத்தைக் கொடுத்த தெலுங்கு படம் கீதா கோவிந்தம். 5 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்த படத்தை பரசுராம் இயக்கி இருந்தார். இந்த நிலையில் பரசுராமுடன் மீண்டும் இணைகிறார் விஜய் தேவரகொண்டா. இவர்கள் இணையும் படத்தை எஸ்விசி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் பரசுராம், தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தில் விஜய்யுடன் மீண்டும் ராஷ்மிகா இணைந்து நடிக்கலாம் என்று தெரிகிறது. இதனை தயாரிப்பு தரப்பு படம் தொடர்பான விவாத நிகழ்வு படத்தை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மற்ற நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.