கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோத்ரா திருமணம், பிரபலங்கள் வாழ்த்து
பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, நடிகர் சித்தார்த் மல்கோத்ரா திருமணம் நேற்று ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் நகரில் உள்ள சூர்யகர் என்ற ரிசார்ட்டில் நடைபெற்றது. திருமண புகைப்படங்களை வெளியிட்டு தங்களுக்கு ஆசீர்வாதமும் அன்பும் அளிக்க வேண்டும் என இருவரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழ் இயக்குனரான விஷ்ணுவர்த்தன் ஹிந்தியில் இயக்கி 2021ல் வெளிவந்த 'ஷெர்ஷா' படத்தில் சித்தார்த், கியாரா இணைந்து நடித்த போது காதலில் விழுந்தனர். கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தவர்கள் இப்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். கியாரா அத்வானி தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் தெலுங்குப் படத்திலும், சத்யபிரேம் கி கதா என்ற ஹிந்திப் படத்திலும் நடித்து வருகிறார். சித்தார்த் 'யோதா' என்ற ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறார்.