ஏகே 62 - அஜித்குமார், மகிழ் திருமேனி, சந்தோஷ் நாராயணன் புதிய கூட்டணி
ADDED : 974 days ago
அஜித்தின் 62வது படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் யார் என முடிவாகிவிட்டதாக கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே வெளிவந்த தகவல் போல மகிழ் திருமேனி தான் இயக்குனர் என முடிவாகி உள்ளதாம். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்றும் சொல்கிறார்கள்.
மகிழ் திருமேனி இயக்கிய முதல் மூன்று படங்களான 'முன்தினம் பார்த்தேனே, தடையறத் தாக்க, மீகாமன்' ஆகிய படங்களுக்கு தமன் தான் இசையமைத்திருந்தார். அதனால், இப்படத்திற்கு தமன் தான் இசையமைப்பார் என்றும் ஒரு தகவல் வெளியானது. ஆனால், தற்போது சந்தோஷ் நாராயணன் இசை என்று தகவல் வெளியாகி உள்ளது.
அஜித்துடன் முதல் முறையாக மகிழ் திருமேனி, சந்தோஷ் நாராயணன் கூட்டணி சேர்கிறார்கள். விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.