படிப்பு தான் மரியாதையை சம்பாதித்து தரும் - ‛வாத்தி' டிரைலர் வெளியீடு
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா நடித்துள்ள படம் ‛வாத்தி'. ஆடுகளம் நரேன், சமுத்திரகனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தெலுங்கில் இந்தப்படம் சார் என்ற பெயரில் வெளியாகிறது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் பிப்., 17ம் தேதி வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் சென்னையில் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தது. இந்நிலையில் இன்று(பிப்., 8) மாலை 6:30 மணியளவில் டிரைலரை இரு மொழியிலும் வெளியிட்டனர்.
‛‛தரமான கல்வி கொடுக்கணும்னா காசு கொடுக்கணும்..., படிக்கணும் என்கிற ஆசை எவனுக்கு வந்தாலும் பணம் கட்டுனா தான் படிப்பு கிடைக்கும்..., கல்வியில் கிடைக்கும் காசு அரசியலில் கிடைக்காது..., பணம் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், ஆனால் படிப்பு மட்டும் தான் மரியாதையை சம்பாதித்து தரும்....'' என்பது போன்று வசனங்களும் டிரைலரில் இடம் பெற்று இருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.