திருமணநாளில் சந்தோஷமான செய்தி சொன்ன சீரியல் நடிகை
ADDED : 972 days ago
தமிழில் 'தேன் மிட்டாய்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பரதா நாயுடு. எனினும், பரதா நாயுடுவுக்கு அடையாளம் கொடுத்தது சின்னத்திரை தான். ஜீ தமிழின் செம்பருத்தி சீரியலில் வில்லி மித்ராவாக மிரட்டியிருந்தார். தற்போது 'தாலாட்டு' தொடரில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். பரதா நாயுடுக்கு கடந்த 2020ம் ஆண்டு பரத் என்பவருடன் கல்யாணம் நடந்தது. திருமணமாகி மூன்றாவது ஆண்டு விழாவை கொண்டாடும் பத்ரா, மகிழ்ச்சிகரமான அந்தநாளில் தான் கர்ப்பாமாக இருக்கும் செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். பரதா - பரத் தம்பதியிருக்கு இன்னும் ஒரு மாதத்தில் குழந்தை பிறக்கவுள்ளதை முன்னிட்டு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.