உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இது யாரோ ஒருவரின் கற்பனை - திருமண நிச்சயம் குறித்து பிரபாஸ் விளக்கம்

இது யாரோ ஒருவரின் கற்பனை - திருமண நிச்சயம் குறித்து பிரபாஸ் விளக்கம்

பாலிவுட் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் 'ஆதி புரூஷ்' படத்தில் நடிகர் பிரபாசும், நடிகை கிருத்தி சனோனும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் சைப் அலிகான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் ஜூன் 16ல் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப்படத்தில் நடித்தபோது இவர்களுக்குள் காதல் மலர்ந்ததாகவும், இருவரும் திருமணம் செய்யப்போவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதை கிர்த்தி மறுத்தார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயம் விரைவில் நடைபெறவிருக்கிறது என தகவல்கள் வெளியானது.

இதை மறுத்துள்ள பிரபாஸ், ''இந்த செய்தி முற்றிலும் பொய். இவர்கள் இருவரும் 'ஆதி புரூஷ்' படத்தில் நடிக்கும் சக நடிகர்கள் மட்டும்தான். பரபரப்பாக பேசப்படும் இந்த கதையில் சிறிதளவும் உண்மை இல்லை. இது யாரோ ஒருவரின் கற்பனை. இவர்கள் பரப்பும் செய்தியை யாரும் நம்ப வேண்டாம்.'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !