நக்கலடித்த மாணவருக்கு அட்வைஸ் உடன் பதிலடி கொடுத்த அர்ச்சனா
ADDED : 1082 days ago
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான அர்ச்சனா அண்மையில் கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது மாணவர்களுக்கே உண்டான துடுக்குத்தனத்துடன் சிலர் அவர் பாத்ரூம் டூர் வீடியோவை குறிப்பிட்டு கமெண்ட் அடித்து கிண்டலடித்தனர். அர்ச்சனா அதற்கு டென்ஷன் ஆகாமல் பொறுமையாக பதில் அளித்தார். அர்ச்சனா அந்த மாணவர்களிடத்தில், 'நான் பாத்ரூமில் எப்படி மலம் கழிக்கிறேன் என்று காண்பிக்கவில்லை. பாத்ரூமை எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று தான் காண்பித்தேன். பாத்ரூமை காட்டுவது தவறு கிடையாது. உங்கள் பாத்ரூம் காட்டும் நிலையில் இருந்தால் காட்டலாம் என எனக்கு கற்றுக்கொடுத்ததே இந்த கல்லூரி தான்' என அட்வைஸ் செய்வது போல் பேசி பதிலடி கொடுத்துள்ளார்.