யோகி பாபுவுக்கு 'கிரிக்கெட் பேட்' பரிசளித்த தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆன எம்எஸ் தோனி தற்போது தோனி என்டர்டெயின்மென்ட் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். அவரது முதல் தயாரிப்பாக தமிழ்ப் படம் ஒன்றைத்தான் தயாரிக்கிறார்.
சினிமா படப்பிடிப்பின் போது ஓய்வு நேரங்களில் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்திருப்பவர் யோகி பாபு. அவர் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்த போது பள்ளி கிரிக்கெட் அணியின் வீரராக இருந்துள்ளார். அவர்களது அணி மாநில அளவிலான சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.
யோகி பாபுவின் கிரிக்கெட் ஆர்வத்திற்காக அவருக்கு தான் பயிற்சியின் போது பயன்படுத்திய கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் தோனி. அந்த பேட் உடன் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து தோனிக்கு நன்றி தெரிவித்துள்ளார் யோகி பாபு.