உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அருள்நிதியின் 'திருவின் குரல்'

அருள்நிதியின் 'திருவின் குரல்'

வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடித்து வரும் அருள்நிதி தற்போது தான் ஏற்கனவே நடித்து வெற்றி பெற்ற டிமான்ட்டி காலனி 2 படத்தில் நடித்து வருகிறார். அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அடுத்தப்படியாக 'திருவின் குரல்' என்ற படத்தில் நடிக்கிறார் அருள்நிதி. லைகாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை ஹரிஷ் பிரபு இயக்குகிறார். ஆத்மிகா நாயகியாக நடிக்க, முக்கிய வேடத்தில் பாரதிராஜா நடிக்கிறார். சாம் சிஎஸ் இசையமைக்கிறார். தற்போது படத்தின் முதல்பார்வையை வெளியிட்டுள்ளனர். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !