உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சென்னையில் ஒருமாதம் ‛இந்தியன் 2' படப்பிடிப்பு

சென்னையில் ஒருமாதம் ‛இந்தியன் 2' படப்பிடிப்பு

இந்தியன் படத்தை அடுத்து மீண்டும் கமல்ஹாசனும் - ஷங்கரும் இணைந்திருக்கும் படம் இந்தியன் 2. இந்த படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் , ப்ரியா பவானி சங்கர், சித்தார்த் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆந்திராவில் உள்ள வனப்பகுதிகளில் நடைபெற்று வந்தது. அப்போது தினமும் ஹெலிகாப்டரில் சென்று இறங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் கமல். இந்நிலையில் மீண்டும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள சில முக்கிய ஸ்டுடியோக்களில் நடக்க உள்ளது. கிட்டத்தட்ட ஒருமாதம் இங்கு படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து, மே மாதத்திற்குள் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு இறுதிக்கட்டப் பணிகளை தொடங்க ஷங்கர் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !