சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் மாவீரன் முதல் பாடல்
ADDED : 963 days ago
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் மாவீரன். அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்து வருகிறார். பரத் சங்கர் இசை அமைக்கிறார். இந்த படத்திற்கான அறிவிப்பை ஒரு ஆக்சன் காட்சி மூலம் படம் துவங்கிய சமயத்தில் வெளியிட்டிருந்தார்கள். அதனால் இப்படம் ஒரு அதிரடியான ஆக்சன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான நாளை பிப்ரவரி 17 ம் தேதி தேதி முதல் சிங்கிள் பாடல் ‛‛சீனா சீனா'' என்ற பாடலை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஒரு புரொமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களுடன் சிவகார்த்திகேயன் ஆடுவது போன்று இடம் பெற்றுள்ளது. நிச்சயம் இது ஒரு துள்ளல் பாடலாக இருக்கும் என தெரிகிறது.