உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அனுஷ்காவுக்கு சிரிப்பு வியாதி: அவரே வெளியிட்ட தகவல்

அனுஷ்காவுக்கு சிரிப்பு வியாதி: அவரே வெளியிட்ட தகவல்

நடிகைளுக்கு இருக்கும் வினோத வியாதிகள் பற்றிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பில் சிக்கி இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதற்கு சிகிச்சையும் பெறுகிறார். நடிகை மம்தா மோகன்தாஸ் தனக்கு சரும பாதிப்பு இருப்பதாகவும், தான் கருப்பு நிறத்திற்கு மாறி வருவதாகவும் கூறியிருந்தார். ஸ்ருதி ஹாசன் கூட பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் பிரச்சினைகள் இருப்பதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் நடிகை அனுஷ்கா தனக்கு சிரிப்பு வியாதி இருப்பதாக கூறியுள்ளார். இதற்கு 'ஸ்மைலிங் சின்ட்ரோம்' என்று பெயராம். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எனக்கு சிரிக்கும் வியாதி இருக்கிறது. சிரிப்பது ஒரு பிரச்சினையா என்று நினைக்கலாம். ஆனால் இது வேறு மாதிரியான சிரிப்பு. நான் சிரிக்க ஆரம்பித்தால் 15 முதல் 20 நிமிடங்கள் தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருப்பேன். நகைச்சுவை காட்சிகள் வந்தால் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருப்பேன். என்னால் அந்த நேரத்தில் சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியாது.

படப்பிடிப்பு அரங்கில் நான் சிரிக்க ஆரம்பித்தால் படப்பிடிப்பை கூட நிறுத்திவிட வேண்டியதுதான். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் சிரித்துக்கொண்டே இருப்பேன். இந்த இடைவெளியில் படப்பிடிப்பில் இருப்பவர்கள் டிபன், ஸ்நாக்ஸ் போன்றவற்றை சாப்பிட்டு முடித்து விடுவார்கள். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !