உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சம்பளத்தை குறைத்த பூஜா ஹெக்டே?

சம்பளத்தை குறைத்த பூஜா ஹெக்டே?

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகை என்றாலும் கடந்தாண்டு இவர் நடித்த படங்கள் வரவேற்பை பெறவில்லை. தமிழில் நடித்த பீஸ்ட், தெலுங்கில் நடித்த ராதே ஷ்யாம், ஹிந்தியில் நடித்த சர்க்கஸ் படங்கள் ரசிகர்களை ஈர்க்கவில்லை. இந்த படங்கள் நடித்த சமயத்தில் மூன்று முதல் மூன்றரை கோடி சம்பளம் வாங்கி வந்துள்ளார் பூஜா. ஆனால் இந்த படங்களின் தோல்வியால் தற்போது தனது சம்பளத்தை ஒரு கோடி வரை குறைத்துள்ளாராம். அடுத்து இவர் தெலுங்கில் மகேஷ் பாபுவின் 28வது படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதுதவிர ஹிந்தியில் சல்மான் உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !