உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவராத்திரி சிறப்பு பூஜையில் தனுஷ்

சிவராத்திரி சிறப்பு பூஜையில் தனுஷ்

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வசூலை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் இரு தினங்களில் தனுஷ், அருண்மதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் இணையவுள்ளார்.

இந்நிலையில் நேற்று சிவராத்திரியை முன்னிட்டு தனுஷ் போயஸ் கார்டனில் அமைந்துள்ள தனது புது வீட்டில் சிவராத்திரியை கொண்டாடியுள்ளார். இந்த பூஜை நிகழ்ச்சியில் தனுஷ் குடும்பத்தினர் மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !