உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரூ.50 கோடி வசூல் : சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய 'சார்' குழு

ரூ.50 கோடி வசூல் : சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய 'சார்' குழு

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'வாத்தி'. தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாரான இந்தப் படம் அங்கு 'சார்' என்ற பெயரில் வெளியானது. இரண்டு மொழிகளிலும் மூன்றே நாட்களில் 50 கோடி வசூலைக் கடந்ததாக படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

நேற்று இரவே படத்தின் வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடியது படக்குழு. அந்த நிகழ்வில் தயாரிப்பாளர்கள், இயக்குனர் வெங்கி அட்லூரி, படத்தில் நடித்த சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய்குமார், சுமந்த், தணிகல பரணி, ஹைப்பர் ஆதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். படத்தின் கதாநாயகன் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

தனுஷ் தெலுங்கில் நேரடியாக அறிமுகமான முதல் படத்திலேயே வெற்றி பெற்றுள்ளார். தமிழ், ஹிந்தியை அடுத்து தெலுங்கிலும் தடம் பதித்துள்ளார். இனி, அவருடைய படங்களுக்கு தெலுங்கிலும் தனி மார்க்கெட் உருவாகும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !