'ஜாக்சன் துரை' 2ம் பாகம்: அதிகாரபூர்வ அறிவிப்பு
ADDED : 957 days ago
2016ம் ஆண்டு வெளியான படம் 'ஜாக்சன் துரை'. இதில் சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு உள்பட பலர் நடித்திருந்தனர். தரணிதரன் இயக்க, சித்தார்த் விபின் இசை அமைத்திருந்தார், யுவராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
காமெடி பேய் படமாக இது தயாராகி இருந்தது. ஓரளவுக்கு வரவேற்பை பெற்ற படம். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தையும் தரணிதரனே இயக்குகிறார். சிபி, சத்யராஜ் இருவரும் நடிக்கிறார்கள். அவருக்கு ஜோடியாக சம்யுக்தா நடிக்கிறார். முதல் பாகத்திற்கு இசை அமைத்த சித்தார்த் விபின் இசை அமைக்கிறார், கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழியில் தயாராகிறது.