மேலும் செய்திகள்
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
928 days ago
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
928 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
928 days ago
சமீபத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை சம்யுக்தா நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸுக்கு முன்பாகவும் ரிலீஸுக்கு பின்னரும் என தமிழிலும் தெலுங்கிலும் மாறிமாறி இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் சம்யுக்தா.
இந்த நிலையில் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி மலையாளத்தில் அவர் கதாநாயகியாக நடித்துள்ள பூமராங் என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஆனால் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் வாத்தி படத்தின் புரமோசன்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் சம்யுக்தா. சமீபத்தில் நடைபெற்ற பூமராங் பட பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது இது குறித்த மனக்குமுறலை படத்தின் தயாரிப்பாளரும், படத்தின் நாயகனான ஷைன் டாம் சாக்கோவும் பகிர்ந்து கொண்டனர்.
சம்யுக்தாவின் இந்த புறக்கணிப்பு குறித்து படத்தின் தயாரிப்பாளர் கூறும்போது, ‛‛நாங்கள் அவரை இந்த படத்தின் புரமோசனுக்காக அழைத்தபோது, தான் இப்போது மிகப்பெரிய படம் ஒன்றின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருவதாகவும், அதுமட்டுமல்ல அடுத்ததாக 35 கோடி பட்ஜெட்டில் உருவாகும் தெலுங்கு படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்து வருவதாகவும் கூறி, எனது கேரியரில் நான் கவனம் செலுத்த வேண்டும் என்றும், இனி நான் மலையாள படங்களில் நடிக்கப்போவதில்லை என்றும் எங்களிடம் கூறிவிட்டார்” என்று தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.
படத்தின் நாயகன் ஷைன் டாம் சாக்கோவிடம், சமீபத்தில் சம்யுக்தா தனது பெயரில் இணைந்திருந்த மேனன் என்கிற ஜாதி பெயரை இனி பயன்படுத்த மாட்டேன் என கூறியுள்ளாரே.. அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த ஷைன் டாம் சாக்கோ, “தான் ஒப்புக்கொண்ட படத்தின் வேலைகளில் முழு கவனம் செலுத்துவதை தவிர்த்து விட்டு, ஜாதி பெயரை பயன்படுத்தாமல் விடுவதால் என்ன நன்மை விளைந்து விட போகிறது” என்று தன் பங்கிற்கு சம்யுக்தாவின் இந்த செயலை விமர்சித்துள்ளார்.
அதேசமயம் படப்பிடிப்பின்போது சம்யுக்தா மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார் என்பதையும் அவர்கள் தவறாமல் குறிப்பிட்டனர்.
928 days ago
928 days ago
928 days ago