மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
953 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
953 days ago
மலையாள நடிகர் பஹத் பாசில் இரண்டு வருடங்களில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் புஷ்பா, விக்ரம் என மிகப்பெரிய வெற்றி படங்களில் நடித்து கிட்டத்தட்ட பான் இந்தியா நடிகர் என்கிற அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார். கன்னடத்தில் இருந்தும் அவரைத்தேடி பட வாய்ப்புகள் வருகின்றன. இந்த நிலையில் தற்போது வருமானவரித்துறையினர் அவர்களது சில சந்தேகங்களுக்கு பஹத் பாசிலை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறி சம்மர் அனுப்பி உள்ளனர்.
குறிப்பாக பஹத் பாசில் ஒடிடியில் வெளியான படங்களில் நடிப்பதற்காக வாங்கிய அட்வான்ஸ் தொகை மற்றும் அவர் தயாரிப்பாளராக உள்ள தயாரிப்பு நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் ஆகியவற்றில் ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்பதற்காகவே அவருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி இதேபோன்று நேரிலேயே ஆஜரான மோகன்லாலிடமும் வருமான வரித்துறையினர் அவரது கணக்கு வழக்குகள் குறித்த சந்தேகங்களை கேட்டு அந்த விளக்கங்களை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
953 days ago
953 days ago