மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் விபத்து - சில வினாடிகளில் உயிர் தப்பிய விஷால் உள்ளிட்ட படக்குழுவினர்
நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' என்ற படத்தில் நடித்து வருகிறார். ரித்து வர்மா நடிக்கிறார். மேலும் இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க, தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து விஷால் வெளியிட்டுள்ள பதிவில் , 'மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் சில வினாடிகளில் பெரும் விபத்திலிருந்து தப்பித்துள்ளேன். கடவுளுக்கு நன்றி' என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .